சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம்,சாக்கோட்டை ஒன்றியம், சிறுகபட்டி ஊராட்சி, குளத்துவேல்பட்டி கிராமம்!முதல்வர் எங்கள் கிராமத்தை காப்பாற்ற வேண்டும்

காரைக்குடி, செப் 21-
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் கோழி பண்ணையால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் கூறும்போது எங்கள் கிராமத்தில் கோழிப்பண்ணை வைத்து அதனால் துர்நாற்றமும் ஈக்களும் சாக்கடையில் கோழி கழிவுகளும் வந்து கொண்டிருக்கிறன

இதனால் குழந்தைகளுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது மேலும் வீடு முழுவதும் ஈக்கள்
வந்து கொண்டே இருக்கிறது.

இதை நாங்கள் போராட்டம் இல்லாமல் அமைதியாக கேட்டதற்கு எங்களை காவல்துறை கைது செய்து ஒரு நாள் வைத்து பிறகு வெளியே விட்டார்கள்.

எந்த அதிகாரிகளும் பழைய மந்திர்களும் புதிய அரசாங்கத்தில் உள்ளவர்களும் எல்லோரிடமும் மன்றாடினோம் யாரும் வரவில்லை அதனால் தான் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

முதல்வர் அவர்களே எங்கள் கிராமத்தை காப்பாற்றுங்கள் உங்களால் தான் முடியும் இதற்கு ஒரு நல்ல தீர்வு கொடுங்கள் என்று தெரிவித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles