


கோலாலம்பூர், செப் 20-
அடுத்த அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில்
நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவ 5 கோடி வெள்ளியை ஒதுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இந்திய சமுதாயம் சம்பந்தப்பட்ட கல்வி, கோயில் போன்ற திட்டங்களுக்கு 50 கோடி வெள்ளியை ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மடானி அரசாங்கம் பல வகைகளில் இந்திய சமுதாயத்திற்கு உதவி வருகிறது.
அரசாங்கம் ஒரு செயலகம் தளத்தை அமைத்து அதன் மூலம் உதவிட முன் வர வேண்டும்.
இப்போது கடனுதவி அல்லது உதவிகளை பெற வர்த்தகர்கள் பல அரசு ஏஜன்சிகளை நாட வேண்டியுள்ளது.
இவை அனைத்தும் ஒரே செயலக தளத்தில் அமைத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
தற்போது தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சின் கீழ் இந்திய தொழில் முனைவோருக்கு உதவ ஆறு ஏஜென்சி கீழ் 22 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு உதவிகள் கிடைக்கப் பெறுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் லேக் கிளப்பில் மைக்கி ஏற்பாட்டில் முத்ரா எனப்படும் மலேசிய இந்தியர் சிறுதொழில் வர்த்தகர்களுக்கு உதவும் கருத்தரங்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருணன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 350 க்கும் மேற்பட்ட இந்திய வர்த்தகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அதிகாரப்பூர்வமாக இந்த கருத்தரங்கை தொடக்கி வைத்தார்.

