பட்ஜெட் 2027: சம்பள உயர்வு குறித்து நற்செய்தி வரவிருப்பதாக அமைச்சர் ரமணன் தகவல்

புத்ராஜெயா, செப் 22 –
வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் தொடர்பான நற்செய்தி இடம்பெறக்கூடும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுகுறித்த விரிவான விவரங்களை வெளியிடாத அவர், நிதி அமைச்சருமான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த மாதம் இதனை முறைப்படி அறிவிப்பார் என்று கூறினார்.

இன்று நடைபெற்ற 17-வது பயிற்றுநர், மேம்பட்ட திறன் பயிற்சி மையத்தின் (சியாஸ்ட்) பட்டமளிப்பு விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுகுறித்து அதிகமாகத் தெரிவிக்க முடியாது, மீறினால் திட்டு வாங்க நேரிடும். உங்களுக்குச் சமிஞ்சை வேண்டுமா? சம்பளம் உயர வேண்டுமா? நிச்சயம் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதை நாட்டின் பிரதமரே அறிவிக்கட்டும். இம்முறை நமது நாடு மேலும் வளர்ச்சியடையும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது,” எனக் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles