சீனாவுக்கான பிரதமரின் பயணம்: RM 2,800 கோடி முதலீட்டு வாய்ப்பினை ஏற்படுத்தியது

ஹாங்சோ (Hangzhou),செப் 25 – சீனாவின் முன்னணி தொழில்துறை நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மலேசியா 2,800 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான சாத்திய முதலீடுகளைப் பெற்றுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஷாங்காய் மற்றும் ஹாங்சோ ஆகிய நகரங்களுக்கு மேற்கொண்ட மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது இந்த முதலீட்டுக்கான உறுதிமொழிகள் பெறப்பட்டன.

அதில் 21 நிறுவனங்களுடனான வட்டமேசை கலந்துரையாடலும், சீனாவின் 5 மாபெரும் தொழில்துறை நிறுவனங்களுடனான சந்திப்புகளும் அடங்கும்.

செமிகண்டக்டர் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு , ரோபாட்டிக்ஸ், மின்சார வாகனங்கள், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகிய பிரிவுகளில் அந்த முதலீடுகள் உறுதிச் செய்யப்பட்டன.

மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் நடப்பு பொருளாதாரக் கொள்கைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக, அந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை தங்களது முதலீடுகளை அதிகரிக்க விருப்பம் தெரிவித்ததாக அன்வார் இப்ராஹிம் கூறினார்.

5-வது உலகளாவிய டிஜிட்டல் வர்த்தகக் கண்காட்சியில் (GDTE) மலேசிய அரங்கைத் திறந்து வைத்த பின்னர் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles