
நீலாய், நவ 5-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார் 500 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த அவர் இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வழங்கினார்.
தற்போது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அருள்குமார் தன்னால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

