மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலம் 755,390 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்

மலாக்கா மாநிலத்தில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகளின் கற்பித்தல், கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காக, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, இவ்வாண்டு மொத்தம் 755,390 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

இந்த நிதி மடானி தளவாட உதவி, மாணவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட இலக்கவியல் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இத்திட்டங்கள் கல்வியமைச்சு, பள்ளி நிர்வாகங்கள், பள்ளி வாரியங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் மாணவர்கள் உரிய உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதே நோக்கம்.

ஆயர் மெர்பாவ் பகுதியில் உள்ள ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மித்ராவின் இத்திட்டங்களின் கீழ் ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளிக்கு 47,560 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles