

கோலாலம்பூர் நவ 5-
இந்த ஆண்டு, கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL), தீபாவளி சமூக நல உதவித் திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்த உதவி வழங்கும் நிகழ்வில், கோலாலம்பூர் மாநகர மேயர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ TPr ஃபட்லுன் பின் மாக் யூஜுட் அவர்களும், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் பரமேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் தலைமையிலான MADANI அரசாங்கம், இனம், மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உதவிகளையும் தொடர்ச்சியான நலத்திட்டங்களையும் உறுதிசெய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

