ஒற்றுமையே நமது பலம். நேர்மையே நமது அடித்தளம். அனைவருக்குமான மலேசியாவே நமது இலக்கு! டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

மலாக்கா நவ 5- மலாக்கா Pay Fong உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற Malam Harapan நிகழ்ச்சியில் மலாக்கா மக்களுடன் இணைந்து கொண்டேன்.

மலேசியாவின் உண்மையான பலம் அதன் மக்களின் ஒற்றுமையில்தான் இருக்கிறது. வெறுப்பு அரசியல், இனவாதம் மற்றும் பகைமை ஆகியவற்றில் அல்ல;

இத்தகைய பிரிவினைவாதப் போக்குகள் நமது நாட்டின் அடித்தளத்தையே சிதைத்துவிடும் என்பதைத் தெளிவாக வலியுறுத்தினேன்.

MADANI அரசாங்கம் தொடர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும், நமது இளைய தலைமுறையினருக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

Google நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை அறிவித்துள்ளதுடன், இதன் மூலம் சுமார் 30,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஜப்பானிய நிறுவனமான Daiso, RM1.5 பில்லியன் மதிப்பிலான தளவாட மையத்தைத் திறந்துள்ளது. இவை அனைத்தும் மலேசியாவின் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார எதிர்காலத்தின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

ஆனால், ஊழல், நிதி முறைகேடுகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் நாட்டின் செல்வம் சூறையாடப்படுமானால், பொருளாதார முன்னேற்றத்தால் மட்டும் எந்தப் பயனும் இல்லை.
அரசியல் என்பது நேர்மை, நம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

மக்களின் நலனைப் பலிகொடுத்து, தனிநபர்களும் குறிப்பிட்ட குழுக்களும் தங்களை வளப்படுத்திக்கொள்ளும் கருவியாக அரசியல் மாறிவிடக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

எனவே, மலாக்கா மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வைப் பாதுகாத்து, சமூகத்தைப் பிளவுபடுத்தும் குறுகிய அரசியலை நிராகரித்து, இனம், மதம் மற்றும் பின்னணி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களுக்கும் அமைதியான, வளமான மற்றும் நீதியான மாநிலத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles