மக்களின் நலனே முதன்மை. அனைவருக்கும் நல்வாழ்வு, அனைவருக்கும் சமமான வாய்ப்பு! டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர் நவ 5-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டத் தயாரிப்புகள் மற்றும் விற்பனைகளால் களைகட்டியுள்ள Brickfields Mega Bazar-இல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.

அவர்களுடன் நேரில் உரையாடி, நலம் விசாரித்து, தீபாவளிப் பண்டிகைக்கான ஏற்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

இப்பண்டிகையை முன்னிட்டு, MADANI அரசாங்கம் நேற்று முதல் 2026 நவம்பர் 6ஆம் தேதி வரை, 5.4 மில்லியன் பயனாளிகளுக்கு RM1.1 பில்லியன் மதிப்பிலான ரஹ்மா ரொக்க உதவித் தொகையின் (STR) நான்காம் கட்டத்தைப் படிப்படியாக வழங்குகிறது.

இந்த உதவியின் மூலம் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க முடியும் என நம்புகிறேன். குறிப்பாக, இந்திய சமூகத்தைச் சேர்ந்த 630,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் உட்பட, ஏனைய பயனாளிகளும் தங்களது அன்றாடத் தேவைகளையும் ஆண்டு இறுதிச் செலவுகளையும் சிறப்பாக நிர்வகிக்க இந்த உதவி துணைபுரியும்.

MADANI அரசாங்கம், STR மற்றும் அடிப்படை ரஹ்மா உதவித் திட்டமான (SARA) போன்ற உதவிகள் உண்மையில் தேவைப்படுவோருக்குச் சென்றடைவதைத் தொடர்ந்து உறுதிசெய்யும்.

இதன் மூலம் அரசாங்கத்தின் நலத்திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles