நாட்டின் நலன் முதன்மை. ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றமே நமது இலக்கு! பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர் நவ 5-
MADANI அரசாங்கத்திற்கும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (Parti Pribumi Bersatu Malaysia – Bersatu) மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தம் (Confidence and Supply Agreement – CSA), நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், அரசாங்க நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட தேசிய வளர்ச்சித் திட்டங்களை மக்களின் நலன் கருதி சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கிய அடித்தளமாக அமைகிறது.

ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது. இருப்பினும், சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு அவை தடையாக இருக்கக்கூடாது.

அரசியல் முதிர்ச்சி என்பது குறுகிய அரசியல் நலன்களைக் காட்டிலும் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகும்.

மலேசியா தொடர்ந்து அமைதியான, நிலையான மற்றும் முன்னேற்றமடைந்த நாடாகத் திகழ்வதுடன், மக்களின் நல்வாழ்வும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.

இந்தப் புரிந்துணர்வு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு அடித்தளமாக அமைந்து, ஜனநாயக நடைமுறைகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அனைவருக்குமான சிறந்த மலேசியாவை உருவாக்க வழிவகுக்கும் என நம்புகிறேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles