

மலாக்கா நவ 6-
மலாக்கா நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு முக்கிய வர்த்தக மையமாகவும், பல்வேறு இனங்கள், கலாசாரங்கள் மற்றும் நாகரிகங்கள் சந்தித்த சங்கமப் பூமியாகவும் திகழ்கிறது.
திறந்த மனப்பான்மை, ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகிய சிறப்பான பண்புகளைத் தொடர்ந்து வளர்த்து, மாநிலத்தினதும் நாட்டினதும் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
பாயா ரூம்புட் (Paya Rumput) மக்களுடன் இணைந்து, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எண் 3, சகோதரர் அஸ்மான் அபிடின் அவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.
மலேசியாவின் உண்மையான பலம் அதன் பன்முகத்தன்மையைப் பிளவுகளுக்கான காரணமாக அல்லாமல், நாட்டின் வலிமைக்கான ஆதாரமாக ஏற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது என்பதை வலியுறுத்தினேன்.
உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இவ்வேளையில், நாம் அனுபவித்து வரும் அமைதியும் அரசியல் நிலைத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷங்களாகும்.
ஆனால், உண்மையான வெற்றி என்பது நமது பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதிலும், குடும்பங்கள் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதிலும், நாட்டின் செல்வம் அனைத்து மக்களையும் சென்றடைவதிலும் தான் இருக்கிறது.
அதனால்தான் ஊழல் மற்றும் அனைத்து வகையான முறைகேடுகளுக்கு எதிராக நான் தொடர்ந்து உறுதியுடன் குரல் கொடுத்து வருகிறேன். மக்களின் நம்பிக்கையும் வழங்கப்பட்ட பொறுப்பும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக விலைபேசப்படக் கூடாது.
மலாக்கா நேர்மை, நல்லிணக்கம் மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு பயணித்தால், இன்னும் பல உயரங்களை எட்ட முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
நாம் போராடுவது இன்றைய வெற்றிக்காக மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறையினருக்கு மரியாதையும் மாண்பும் நிறைந்த ஒரு சமூகத்தையும் நாட்டையும் விட்டுச் செல்வதற்காகவே என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

