

கோலாலம்பூர் நவ 5-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிக்ஃபீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா குடியிருப்பாளர் பிரதிநிதித்துவக் குழுவின் (KRT Brickfields Section A) ஏற்பாட்டில், பிரிக்ஃபீல்ட்ஸ் தீபாவளி பஜாரில் நடைபெற்ற அறப்பணி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வை, கூட்டரசுப் பிரதேச தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்புத் திணைக்களத்தின் இயக்குநர் மாண்புமிகு Tuan Burhanudin அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
KRT Brickfields Section A தலைவர் மாண்புமிகு ஜே.எஸ். மணியம் என்ற ஸ்டார் மணியம் அவர்களும் இந்நிகழ்வில் உடனிருந்தார்.
சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்தகைய அறப்பணிகள், மக்களிடையே அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை மேலும் வலுப்படுத்துகின்றன என்று அவர் சொன்னார்.
பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

