மலாக்கா தேர்தலில் அரசியல் சுயநலத்தை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும்

மலாக்கா, நவ 12-

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெங்காலான் பத்து தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான்  சார்பில் போட்டியிடும் ஜேசன் சேஷி நாதன்  அரசியல் சுயநலத்திற்கும் தனிப்பட்ட நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசியலை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் என்பது தனிப்பட்ட ஆதாயங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையாக இருக்கக்கூடாது என்றும், மக்களின் நலன், பொதுச் சேவை மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இளைஞர்கள் அரசியல் விவகாரங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதுடன், தலைவர்களின் செயல்பாடுகள், நிர்வாகத் திறன் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றை ஆராய்ந்து தங்களது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

 இத்தேர்தலில் இளைஞர்கள் தங்களது வாக்குரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்தி, மக்களின் எதிர்காலத்தையும் நலனையும் முன்னிறுத்தும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜேசன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles