அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவளிக்க வேண்டும் 

Foto: FB Anwar Ibrahim

மலாக்கா, நவ 13-

மலாக்கா மாநிலத் தேர்தலில் அனைத்து இன மக்களும் இன வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவளித்து, மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் எனப் பிரதமரும் அக்கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

அலோர் காஜா, கம்போங் மாச்சாப் பாரு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மலாய், சீனர், இந்தியர் மற்றும் பூர்வகுடி மக்கள் என அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அந்நிகழ்ச்சியின்போது, மாச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ கினி லிம் (Ginie Lim) அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே தாம் அங்கு வந்ததாக அன்வார் குறிப்பிட்டார். மேலும், மக்களின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இரவு நேரச் சந்தையில் வியாபாரிகளையும் பொதுமக்களையும் சந்தித்த அன்வார், பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி, மலாக்காவின் எதிர்கால வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles