
மலாக்கா, நவ 13-
மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் களமிறங்கி தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினார்.
நேற்று மாலை சுமார் 6.05 மணியளவில் தாமான் குருபோங் ஜெயாவில் உள்ள கடைத் தொகுதிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் கடைகளுக்குச் சென்ற அன்வார், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் மக்களைச் சந்தித்த அவர், கம்போங் மாச்சாப் பாரு பகுதிக்குச் சென்றதுடன், ஆயர் மொலேக்கில் நடைபெற்ற ‘Ngopi Santai’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர் புக்கிட் பாருவில் உள்ள ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் நடைபெற்ற ‘Jelajah Harapan Melaka Rumah Kita’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இறுதியாக அலோர் காஜாவில் நடைபெற்ற ‘Pesta Melaka Rumah Kita’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரிசான் நேஷனல் 23 தொகுதிகளிலும், பெர்சாமா 16 தொகுதிகளிலும், பெர்சத்து 7 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் மொத்தம் 6,87,697 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

