
மலாக்கா, நவ 13-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, அதன் உறுப்பு கட்சிகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் வலுவாகச் செயல்பட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் நீண்டகால அரசியல் பயணத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நம்பிக்கையும் ஒற்றுமையும்தான் மற்ற அரசியல் கூட்டணிகளிலிருந்து இதனைவேறுபடுத்துவதாகக் கூறினார்.
மேலும், மலாக்கா மாநிலத் தேர்தலில் இக்கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் வழிநடத்துவதால், அதன் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

