
மலாக்கா, நவ 13-
மலாக்கா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், குருபோங் ஜெயா, தாமான் குருபோங் ஜெயா பகுதியில் உள்ள சிறு வணிகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று மாலை சுமார் 6 மணியளவில் அங்கு சென்ற அன்வாருடன், கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் மற்றும் பாயா ரும்புட் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ அஸ்மான் அபிடின் ஆகியோரும் உடனிருந்தனர்.
அப்பகுதியில் செயல்பட்டு வந்த சுமார் 50 சிறு வணிகர்களின் கடைகளைப் பார்வையிட்ட அன்வார், அவர்களுடன் சுமார் 30 நிமிடங்கள் செலவிட்டு நலம் விசாரித்ததுடன், வணிக நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
பிரதமரின் வருகையால் அங்கிருந்த வணிகர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். .

