ஏழு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்து செய்ய பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்கா, நவ 13-

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (ல்வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், பாரிசான் நேஷனல் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஏழு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்து செய்யப்போவதாக அதன் மலாக்கா தலைவர் டத்தோஸ்ரீ அட்லி ஜஹாரி தெரிவித்துள்ளார்.

அந்தப் பதவிகளை ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவினச் சேமிப்பை, இளைஞர்கள் சொந்த வீடு வாங்குவதற்கான உதவித் திட்டங்களுக்கும் இளம் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் என்றார்.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மலாக்கா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான செரி பெண்டஹாராவை மீண்டும் திறந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘Aspirasi Melaka Rumah Kita’ திட்டத்தின் கீழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அட்லி ஜஹாரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles