
ஆயர் மோலெக், நவ 13-
மலாக்கா மாநிலத் தேர்தலில் ஆயர் மோலெக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் புதிய முகமான முஹம்மது ஹக்கிமின் மோக்தார், வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பாளர் என்பதால் தன்னைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாக்காளர்களிடம் ஏற்படக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், தொகுதி முழுவதும் மக்களை நேரடியாகச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்துவதுடன், பக்காத்தான் ஹராப்பானின்
தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து வருகிறார்.
மேலும், தேர்தல் பிரசார காலம் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும், அடித்தட்டு மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் ஆகியோரும் ஆயர் மோலெக் இரவு சந்தையில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களைச் சந்தித்தனர்.

