ஊழல் அரசியல் கலாசாரத்தை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்

Foto : Bernama

மலாக்கா மாநிலத் தேர்தலில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஊழல் அரசியல் கலாசாரத்தை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தியுள்ளார்.

அலோர் காஜாவில் நடைபெற்ற ‘Pesta Melaka Rumah Kita’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசின் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர, அவருடன் இணக்கமாகச் செயல்படும் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

மேலும், கடந்த காலத்தில் நிகழ்ந்த 1MDB நிதி ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார். 1MDB தொடர்பான கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக அரசாங்கம் 50 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையைச் சுமக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். அந்த நிதியை மருத்துவமனைகள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சாலை மேம்பாட்டிற்குப் பயன்படுத்தியிருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளையில், அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் அடுத்த ஆண்டு முதல் ஆறாம் படிவ மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகை ஆகியவை அவற்றில் அடங்கும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார். எனவே, வரும் சனிக்கிழமை வாக்களிக்கும் நாளில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles