கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவு – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

சென்னை, நவ 20-

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“திரு. வி.எஸ். பாபு அவர்கள் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், திடீரென வெளியாகியுள்ள அவரது மறைவுச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.தமிழ் செய்திகள்

திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles