கல்வி அமைச்சின் 12 பாட வேளையை வரவேற்றார் மாண்புமிகு சிவகுமார்!!

கோலாலம்பூர்,நவ 24-
ஆம் ஆண்டு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் மலாய் மொழி,தமிழ் மொழி மற்றும் சீனமொழிக்காக வாரம்தோரும் ஒதுக்கப்படும் 12 பாடவேளைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த கல்வி அமைச்சு எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேறறு ஆதரிப்பதாக தெரிவித்த பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார்,இம்முடிவு ஆக்கப்பூர்வமானதாகவும் எல்லாத் தரப்பின் நம்பிக்கைக்குரியதாகவும் அமைந்திருப்பதாகவும் கூறினார்.

இம்முடிவானது கல்வி அமைச்சர் பஃட்டிலினா சிடேக் மற்றும் துணை கல்வி அமைச்சர் மாண்புமிகு வோங் கா வோ மேற்கொண்டிருப்பது பல்லினம் வாழும் நம் நாட்டில் மொழி கல்வியின் முக்கியத்துவம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை அமைச்சு உறுதி செய்திருப்பதாகவும் கூறிய அவர் கல்வி அமைச்சு எடுத்திருக்கும் இம்முடிவு ஆக்கபூர்வமானதும் விவேகமானதும் என்றும் குறிப்பிட்டார்.

அதே வேளையில்,இவ்விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு முன்னர் பல்வேறு தரப்பின் ஆலோசனைகள்,பார்வைகளையும் ஆராய்ந்து அதன் பின்னர் நல்லதோர் முடிவையும் எடுத்த கல்வி அமைச்சைப் பாராட்டுவதாகவும் மேலும் கூறினார்.

மாணவர்களிடையே மொழி பாடங்களில் ஆற்றலை மேம்படுத்தவும் அவற்றில் மாணவர்கள் போதுமான நேரத்தை தொடர்வதற்கும் பயனளிக்கும் வகையில் 12 பாடவேளைகள் அமைந்திருக்கும் சாத்தியத்தை க் கல்வி அமைச்சு மீண்டும் உறுதி செய்திருப்பது அனைத்து தரப்பிற்கும் நிறைவான ஒன்றாக அமைந்துள்ளது என்றார்.

நம் பிள்ளைகளின் எதிர்காலமும் அவர்களின் சிறந்த கல்வி முறையும் நிலைத்திருக்க இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் மாண்புமிகு சிவகுமார் வலிறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles