பீடோர்,நவ23-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியோடு பன்முக மொழிகளிலும் ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்கள் என பேரா மாநிலத் மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் குறிப்பிட்டார்.
நம் பண்பாட்டோடு தமிழ்,மலாய்,ஆங்கில மொழிகளிலோடு அறிவியல்,கணிதம் சார்ந்தும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திறன் மிக்கவர்களாக செழிமையுற்று திகழ்கிறார்கள் என்றார்.
மேலும்,தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் அக்கறையும் சிறந்த மாணவர்களை மட்டுமின்றி நல்ல சமூகத்தையும் நம் இனத்திற்கு உயிர்பெற செய்கிறார்கள் என்றும் கூறினார்.
பத்தாங் பாடாங் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான தன்முனைப்பு மற்றும் தன்னாளுமைப் பட்டரையினை நிறைவு செய்து வைத்து பேசுகையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆறாம் ஆண்டு முடித்து இடைநிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் இடைநிலைப்பள்ளியிலும் கல்வியோடு பன்மொழி ஆற்றலையும் திறனையும் வெளிப்படுத்தி தமிழ்ப்பள்ளி.மாணவர்கள் சளைத்தவர்கள் அல்ல,சாதனையாளர்கள் என்பதை எல்லா காலக்கட்டத்திலும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
அதே வேளையில்,இடைநிலைப்பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்க முடியாத மாணவர்கள் தங்களின் நம்பிக்கையான எதிர்காலத்தை தொழில் திறன் கல்வியின் வாயிலாக உயர்த்தி கொள்ள வேண்டும்.

தொழில் கல்வி நம்பிக்கையான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.பேரா மாநிலத்தின் PASAK வாயிலாக தொழில் திறன் கல்வி சார்ந்த நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றும் அதனை மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் கையிலும் உள்ளது என்றார்.
பத்தாங் பாடாங் மாவடத்தைப்ன்பொருத்தமட்டில் இங்குள்ள ஒவ்வொரு பள்ளியின் தேவைகளையும் தாம் தொடர்ந்து நிறைவு செய்து வருவதாகவும் மானியங்கள் உட்பட அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு,சீரமைப்பு பணிகள் என எல்லா நிலை தேவைகளும் நிறைவு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
சுங்கை வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி தாப்பா நாடாளுமன்றன்,சிலிம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கும் பல்வேறு உதவிகளையும் மானியங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர் பேரா மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியின் தேவைகளும் மேம்பாடுகளும் தனித்துவமாக ஆராயப்பட்டு அதனை நிறைவு செய்தும் வருவதாக தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமையாசிரியர் கழகத்தின் தலைவரும் சுங்கை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான திரு.கா.தியாரன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தன்முனைப்பு- தன்னாளுமைப் பட்டரை மாண்புமிகு டத்தோ அ.சிவநேசனின் ஆதரவோடு அவர் வழங்கிடும் மானியத்தோடு சிறப்பாக நடந்தேறி வருவதாக கூறினார்.
மேலும்,இங்குள்ள தமிழ்ப்பள்ளிகள் மட்டுமின்றி மாநிலம் முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளிகள் டத்தோ சிவநேசனின் சேவையாளும் முயற்சியாலும் தனித்துவமாய் உயர்ந்தும் நிற்பதாக கூறினார்.
பத்தாங் பாடாங் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு பள்ளியின் கோரிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களின் கல்வி பயணத்திற்கு பெரும் உந்துதலாக டத்தோ சிவநேசனின் சேவையும் ஆற்றலும் மேலோங்கி நிற்பதாகவும் குறிப்பிட்டார்.
பத்தாங் பாடாங் மாவட்டத்தின் 12 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இப்பட்டரையை மேனாள் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் விரிவுரையாளர் முனைவர் சேகர் நாராயணன் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
[24/11, 13:45] 💎KALIDASS: தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆற்றம் மிகுந்தவர்கள் – ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு கொண்டவர்கள்!
டத்தோ சிவநேசன் தகவல்!!