
பீடோர்,நவ24
கிளாந்தானில் வன வளத் தொழில்நுட்பம் இளங்கலை கல்வியை மேற்கொண்டிருக்கும் தன் மகளின் தங்கும் இடம் வாடகை செலவை ஏற்றுக்கொண்டு வெ.2000 வழங்கிய பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுபினருமான மாண்புமிகு டத்தோ அ.சிவநேசனுக்கு இங்குள்ள கம்போங் ஹென்றாவைச் சார்ந்த திரு.திருமதி.வீரபாரதி – மகேஸ்வரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
தங்களின் மகள் அனுஷா தற்போது இரண்டாம் தவணையில் கல்வியில் தொடரும் நிலையில் பிடிபிடிஎன் கல்வி கடனுதவி கல்விக்கும் அவரது உணவு தேவைக்கும் போதுமானதாக இருக்கும் சூழலில் முதல் தவணையோடு பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதி வசதி நிறைவடந்த பின்னர் தற்போது வெளியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருவதாகவும் அனுஷாவின் பெற்றோர்கள் நினைவுக்கூர்ந்தனர்.
கிளாந்தான் மலேசியா பல்கலைக்கழகத்தில் கல்வியை மேற்கொண்டிருக்கும் அனுஷாவின் தந்தை தாப்பா மார்கெட்டில் சிறுத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்.அவரது தாயார் உடல்நலம் பாதிப்பால் வீட்டில் இருந்து வரும் சூழலில் சமூக நல இலாகாவின் உதவியையும் பெற்று வருகிறார் என்பதையும் பகிர்ந்து கொண்ட அப்பெற்றோர்கள் உதவினு வந்தவுடன் மகளின் கல்வி எந்நிலையிலும் துளியும் பாதித்திடக்கூடாது என சொல்லி ஒரு தவணைக்கான வாடகையை காட்டிலும் அதிகமாகவே வழங்கி எங்களின் சுமையையும் மனபாரத்தையும் டத்தோ சிவநேசன் இறக்கி வைத்தார் என்றனர்.
இதற்கு முன்னர் கூட தனது வியபார இடம் சிக்கலை எதிர்நோக்கிய போது ஊராட்சி மன்ற உறுப்பினர் வாயிலாக அச்சிக்கலுக்கும் தீர்வு கண்டு நிரந்திர வியபார இடத்தையும் டத்தோ சிவநேசன் பெற்று தந்ததையும் நினைவுக்கூர்ந்த வீரபாரதி உதவினு அவரது சேவை மையத்தின் கதவுகள் தட்டப்படும் போதெல்லாம் உதவிடும் மாண்புமிகு டத்தோ சிவநேசனின் சேவையால் தாங்கள் உணர்ச்சிவசப்படுவதாகவும் அவரது சேவையால் நன்மை அடைந்துள்ள நிலையில் அவருக்கு நன்றி பகிர்வதோடு தொடர்ந்து அவரது சேவையால் சுங்கை சட்டமன்றம் செழித்தோங்கும் என்பதில் துளியும் ஐயமில்லை என்றனர்.
இப்பெற்றோர்களின் சிக்கலை உணர்ந்து அவர்களை டத்தோ சிவநேசனின் சேவை மையத்திற்கு கம்போங் ஹென்றா கிராமத்து தலைவர் திருமதி,.மு.செல்வி அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

