புக்கிட் கியாரா சமூகநல அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் தாலாட்டுதே வானம் கலைவிழா

டமான்சாரா புக்கிட் கியாரா சமூகநல அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் தாலாட்டுதே வானம் கலைவிழா வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி கோலாலம்பூர் துன் சம்பந்தன் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன், நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகர் டத்தோ எம் ரவி ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொள்கிறார்கள்.

டத்தோ எம்.பெரியசாமி, தொழிலதிபர் இளஞ்செழியன், டத்தோ ராஜூ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

புக்கிட் கியாரா சமூகநல அபிவிருத்தி சங்கத்தின் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் முத்தழகன், ராமா, டாக்டர் கே எஸ். பாஸ்கரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் இந்த விழாவை விமரிசையாக ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு இலவச படைப்பு. மேலும் வருகையாளர்களுக்கு தேநீர் உபசரிப்பு வழங்கப்படும் என்று முத்தழகன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles