வேலையின்மை பிரச்சினையை கையாள்வதில் மனிதவள அமைச்சு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது!

கோலாலம்பூர், ஜூன் 7-
நாட்டில் வேலையின்மை பிரச்சினையை
கையாள்வதில் மனிதவள அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மனிதவள அமைச்சின் துணை அமைச்சர் துவான் முஸ்தாபா சக்மூட் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

இளைஞர்கள் மத்தியில் நாட்டில் வேலையின்மை பிரச்சினையை
கையாள்வதில் மனிதவள அமைச்சு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஹிடான் காசிம் இன்று கேள்வியை முன்வைத்தார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர் முஸ்தாபா, புள்ளியியல் துறையின் தொழிலாளர் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில்
மலேசியா, 2023 முதல் காலாண்டில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம்11.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் முதல் 10.1 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றார்.

நாடு முழுவதும் கேரியர் கார்னிவல் திட்டம் எனப்படும் வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் அதிகமான இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது.

இதுவரை 1,366 கார்னிவல் நடத்தப்பட்டுள்ளன.
இதில் 21,740 வேலை தேடுபவர்கள் வெற்றிகரமாக வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இதில் 78.12 விழுக்காடு இளைஞர்கள் என்று அவர் தெரிவித்தார்.

வேலையின்மையை குறைக்க உதவும் வகையில் மனித வள அமைச்சு மற்றும் ஏஜென்சிகள் மூலம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகும் என்றார்.

கல்வி மற்றும் பயிற்சியின் அடிப்படையில் தொழில் திறன் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி (TVET) மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

மனிதவளத் மேம்பாட்டுத் துறை மூலம் வேலை வாய்ப்பு
திறன்கள், மனித வள மேம்பாடு பெர்ஹாட் மற்றும்
SOCSO நிறுவனங்கள் மூலம் இந்த பயிற்சி திட்டங்களை வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles