
இந்த நாட்டில் இந்திய சமுதாயம் அரசியல் பலம் பெறவேண்டும் என்றால்,இந்தியர்கள் பெருன்பாண்மை கொண்ட தொகுதிகள் உறுவாக்கபட வேண்டும் என ஜொகூர் மாநில வரிசான் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு அரசியல் இனம் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கிறோம்.
ஒரே மலேசிய,ஒரே இனம்,ஒரே குடும்பம் போன்றவை எல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் என்பதை நினைவில் வைத்து இந்திய தலைவர்கள் இந்திய வாக்களர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திரு சந்திர சேகரன் வேண்டுகோள் தெரிவித்துள்ளர்.
மேலும்,அந்த வேட்பாளர்கள் எந்த காட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அதில் சிக்கல் இல்லை மாறாக அந்த தொகுதியில் இந்திய வாக்களார்களை கவர முயற்சிக்க வேண்டும்.
உதாரணதிற்கு கெடா மாநிலத்தில் புக்கிட் செலம்பாவ், பினாங்கு மாநிலத்தில் பிராய் சட்ட மன்றம், பேரா மாநிலத்தில் ஈப்போ பாராட் நாடாளுமன்றம்,புந்தோங் சட்டமன்றம், ஜொகூர் மாநிலத்தில் பெக்கோ சட்ட மன்றம் , தெலோ ஈத்தானில், பாகான் டத்தோ நாடாளுமன்றம் மாற்றும் குவாலா சிலாங்கூர் நாடாளுமன்றம் போன்றவை இந்திய வாக்காளர்கள் பெருன்பாண்மையாக உள்ளனர்.
ஆகவே தேர்ந்தெடுக்கப்படும் அந்த வேட்பாளர் முழுக்க முழுக்க இந்தியர்களின் முழு ஆதரவில் வெற்றி பெறுவராக என்றால் அந்த தேர்ந்து எடுக்கபடும் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
அத்தோடு நம் இந்திய சமுதாயக்கும் உரிய மரியாதை பெற வழிவகுக்கும் என சமூக ஆர்வாளருமான திரு சந்திர சேகரன் கேட்டு கொண்டார்.

