


தஞ்சோங் சிப்பாட், ஜுலை 31-
மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சோக்சோ நிறுவனத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (SESCO) தொழில் ஆய்வுத் திட்டத்தை இன்று பந்திங் பத்து லாவூட் தேசிய உயர்நிலைப் பள்ளியில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த தொழில் ஆய்வு திட்டமானது மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசியா கல்வி அமைச்சின் ஆதரவைப் பெற்று இந்தத் திட்டத்தின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பு நேர்மறையான மாற்றங்களைத் தூண்டும்.
இதனால் தற்போதைய வேலைச் சந்தையை மேம்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.
PERKESO மற்றும் Pintar அறக்கட்டளைக்கு இடையேயான முழு ஒத்துழைப்பின் விளைவாக சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பகாங்கைச் சுற்றி 11 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட பல்வேறு பள்ளித் திட்டங்களைத் தவிர, 1,000 பேரைத் தாண்டிய மாணவர்களின் பங்கேற்புடன் இந்தப் பள்ளிகள் கவனமாகக் கண்டறியப்பட்டு இந்தத் திட்டத்தில் பயன் பெறத் தேர்ந்தெடுக்கப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் 10 கவுன்சிலிங் ஆசிரியர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் மனித வள அமைச்சர் சிவகுமார் வழங்கினார்,
அவர்களுக்கு MYFutureJobs போர்ட்டலின் செயல்பாடுகள் குறித்த வெளிப்பாடு மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டது
இதனால் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு அதன் அம்சங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க முடியும்.
SOCSO உடன் பயிற்சியாளர் திட்டத்தின் மூலம் தொழிலாளர் சந்தை மற்றும்
MYFutureJobs போர்ட்டலின் நன்மைகளையும் வலியுறுத்தினார்.
இது மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களால் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வேலை வாய்ப்பு சந்தைகளை சார்ந்தது என்று அவர் சொன்னார்.
Sekolah Menengah kebangsaan Batu laut பள்ளியில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் Perkeso தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் கிள்ளான் சொக்சோ நிறுவனத்தின் நிர்வாகி மோகன்தாஸ், மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

