இளம் திறமையாளர்களை உருவாக்குவதில் TalentCorp – மனிதவள அமைச்சு பாடுபடும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பெடோங், ஜூலை 30-
நாட்டில் இளம் திறமையானவர்களை உருவாக்க Telent Corp மற்றும் கல்வி அமைச்சுகளுடன் இணைந்து பாடுபடுவோம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

நாட்டில் தொழிலாளர் வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

இளம் திறமையானவர்களால் நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

வேகமாக மாறி வரும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம்,
உலகமயமாக்கல் மற்றும் புதுமை தொழில் மற்றும் சமூகத்தை மறுவடிவமைக்கிறது.

அந்த வகையில்
அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயலாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மலேசியரும் தொடர்ந்து முன்னேற வாய்ப்பு உள்ளது.

TalentCorp மூலம் மனிதவள அமைச்சு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

இன்று கெடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Rock The School இது முதல் மெகா பதிப்பாகும்.

முதல் முறையாக மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் Rock The School திட்டம் இதுவாகும்.

கால மாற்றத்தின் உந்தி சக்தியாக இளைஞர்கள் இருப்பதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழிலாளர்களின் வளர்ச்சியில் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. எந்த சவாலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறது என்று இன்று கெடாவில் Rock The School திட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Bedong university aimst பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் மற்றும் Talent Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி தோமஸ் மேத்தியூ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles