கெடாவில் இரண்டு சமூகநல இல்லங்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

கெடா மாநிலத்திற்கு கடந்த வாரத்தில் சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் லூனாஸில் உள்ள காமாட்சி சிறுவர்கள் இல்லத்திற்கு 5,000 வெள்ளி மானியம், 30 உணவுக் கூடைகள் மற்றும் 15 மடிக்கணினிகளை வழங்கி பேருதவி புரிந்தார்.

பின்னர்
Kedah kulim Sunshine Cottage Welfare Society இல்லத்திற்கும் வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் 60 உணவு கூடைகளையும் 5,000 வெள்ளி காசோலையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த இரண்டு பராமரிப்பு மையங்களிலும் வயதானவர்கள், தாய்மார்கள் மற்றும் வசதி குறைந்த பிள்ளைகள் இருக்கிறார்கள்.

HRDcorp மேற்கொள்ளும் சமூக நல திட்டத்தின் மூலம் இந்த இல்லங்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நம்புகிறோம் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

HRD Corp சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக இப்போது பல இடங்களில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles