


காஜாங் ஜூலை 30-
காஜாங் தாமான் ஸ்ரீ மெலூர் ஸ்ரீ கல்லுமலை கருமாரியம்மன் ஆலயத் திருவிழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் கருணாகரன் மற்றும் செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
மனிதவள அமைச்சர் வ.சிவகுமார், காஜாங் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் டேவிட் சோங், காஜாங் கவுன்சிலர்கள் தியாகராஜன், பாலமுரளி, டத்தோ டாக்டர் ஜெகா உட்பட பலரும் ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ கணபதிராவ் இந்த ஆலயத்திற்கு நிலத்தை பெற்றுத் தந்துள்ளார்.
இப்போது இந்த நிலத்தில் கட்டப்படும் புதிய ஆலயத் திருப்பணிக்கு கண்டிப்பாக உதவி செய்வேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

