


கிளப் பெமூடா செந்தூல் தலைவர் பிரேம் குமார் தலைமையில் நேற்று டத்தோ ஏ.கே. இராமலிங்கம் கிண்ண British Pool போட்டி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 3,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
செந்தூல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ராஜகோபாலுக்கு இந்த போட்டியில் சிறப்பு செய்யப்பட்டது.
போட்டியை காண சிறப்பு வருகை புரிந்த டத்தோ இராமலிங்கத்திற்கு கிளப் பெமூடா செந்தூல் சார்பில் ஜீவா மாலை அணிவித்து சிறப்பித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரேம் குமார் தலைமையில் இந்த போட்டி மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
இந்தியர்களின் மத்தியில் British Pool போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பிரேம் குமார் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

