ஆலயங்களில் சமயத்திற்கு இழுக்கை தேடித்தரும் சம்பவங்களை புறக்கணியுங்கள்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

நீலாய் ஜூலை 29-
ஆலயங்களில் நடக்கும் கேலி கூத்தான சம்பவங்கள் சமயத்திற்கு பெரும் இழுக்கை தேடித்தருகிறது.

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க ஆலய நிர்வாகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

இன்று நீலாய் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சைவ மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமீபகாலமாக ஆலயங்களில் நடக்கும் சம்பவங்கள் பெரும் வேதனையை அளிக்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு சமய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆலயத் தலைவர்கள் சமயக் கல்வியை பெற்றிருப்பது முக்கியம்.

அப்போதுதான் அவர்கள் ஆலயத்தை சமய நெறியோடு வழிநடத்த முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles