பாதுகாப்பு பாஸ்போர்ட் இல்லாத பல தொழிலாளர்கள் இன்னமும் உள்ளனர்! மனிதவள அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

அலோர் ஸ்டார் ஆக 1-

இந்த நாட்டில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (keselamatan dan kesihatan (KKP) தொடர்பான பயிற்சி மையங்களுக்கு தொழிலாளர்களை அனுப்ப முதலாளிகளின் விழிப்புணர்வு நிலை இன்னும் குறைவாகவே உள்ளது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

Pasport Keselamatan எனப்படும் பாதுகாப்பு பாஸ்போர்ட் இல்லாத பல தொழிலாளர்கள் இன்னும் உள்ளனர்.

2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் பங்கேற்பது அதிகரித்து வருவதாகக் காணப்பட்டாலும் இது தொடர்பான விழிப்புணர்வு முதலாளிகள் மத்தியில் இன்னும் குறைவாகவே உள்ளது

“பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான்.

ஆனால் விழிப்புணர்வு நிலை இன்னும் குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்

தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் அனைவருக்கும் திறந்திருக்கும் என்று கெடா அலோர் ஸ்டாரில் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தபோது நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles