


கோலாலம்பூர், ஆக 1-
திறன்கள் தேவைப்படும் திறமையான பணியாளர்கள்,
தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) மூலம் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வரும் 2030 ஆண்டுக்குள்
35% திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கும் இலக்கை
அரசாங்கம் சாதிக்க விரும்புவதால் இது முக்கியமானது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
திறமையான மனித மூலதனம்
கல்வி மற்றும் தொழில்துறையின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் திறமையான மனித மூலதனம் மற்றும்
உள்ளூர் தொழிலாளர்களின் போட்டித்தன்மை தேவைபடுகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவின்படி
மனிதவள அமைச்சிடம்
இந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது.
தேசிய TVET கவுன்சிலின் (MTVET) செயலகம் மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ்
(KPT) மனிதவள அமைச்சு
இந்த வாய்ப்பை வலுப்படுத்தி கொள்ளும் என்று அவர் சொன்னார்.
மலேசியா (Sistem Persijilan Kemahiran
Malaysia (SPKM)) ஒரே TVET சான்றிதழ் அமைப்பை மனித வள அமைச்சு பரிந்துரைக்கிறது
அதன்படி
மனிதவள திறனை உருவாக்க அரசு ஒத்துழைக்கிறது.
தொழில்துறைக்குத் தேவையான
தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று இன்று கோலாலம்பூர் intercontinental விடுதியில் Academy in industry எனப்படும் தொழில் துறை உயர் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Academy in Industry என்பது பட்டதாரி மாணவர்களுக்கான மாற்றுத் திட்டமாகும்.
வேலை பெற விரும்பும் பள்ளி
அவர்களின் ஆர்வமுள்ள துறையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
18 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் தொழில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
இது தொழில் மற்றும் மாணவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது
இதுபோன்ற திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள்
முதலாளியால் தேடப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.
மனித மூலதனத்தை வளர்ப்பதில் தேசிய TVET தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியுடன் இணைந்து மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்த தொழில் துறை உயர் மேம்பாட்டுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் HRD Corp தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல், Perkeso நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

