

புத்ரா ஜெயா, ஆக.2-
மலேசிய சர்வதேச தொழிற்சங்க நெட்வொர்க் கவுன்சிலின் (Kesatuan Sekerja Antarabangsa Malaysia (UNI-MLC)) தலைவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
Datuk Mohamed Shafie BP Mammal தலைமையிலான மலேசிய சர்வதேச தொழிற்சங்க கூட்டணியில் 106 தொழிற்சங்கங்கள் உள்ளன.
இதில் நாடு முழுவதும் 4 லட்சத்து 50,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
மலேசிய தொழிற்சங்கக் கூட்டுத்தாபனத்தின் (Presiden Malaysia Trade Union Corporation (MTUC) தலைவர் சகோதரர் Mohd Effendy மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளின் நண்பர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பு கூட்டம் நல்ல பலனை தந்திருப்பதாக அவர் சொன்னார்.
இந்த மரியாதைக்குரிய வருகை அமர்வின் போது எழுப்பப்பட்ட தற்போதைய பிரச்சினைகள் பற்றிய பகிர்வு மற்றும் விவாதத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.
எனது தொழிற்சங்க நண்பர்களின் பல்வேறு கருத்துக்களையும் எப்போதும் செவிமடுக்க நான் உறுதியளிக்கிறேன்.
மேலும் இணக்கமாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் மற்றும் புகார்களைத் தீர்ப்பதில் முனைப்புடன் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் உறுதியளித்தார்.

