
புத்ரா ஜெயா ஆக.3-
சொஸ்மா சட்டத்தை மறு செய்யும் பணியில்
அரசாங்கம் இருக்கிறது என்று சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் அறிவித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக சிறைச்சாலை முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த குடும்பங்களைச் சந்தித்த ராம் கர்ப்பால் சிங்,
சொஸ்மா சட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதால் உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சு,அரச மலேசிய போலீஸ் படை, சட்டத்துறை இலாகா வுடன் இது தொடர்பில் கூட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.
சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங்கின் இந்த அறிவிப்பு சற்று ஆறுதலாக இருக்கிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் சொன்னார்
சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள அனைவருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தியது என்றார் அவர்.
ஆகவே இதற்கு நல்ல முறையில் தீர்வு காண ராம் கர்ப்பால் சிங் முயற்சியில் இறங்கி இருப்பதை வரவேற்கிறேன் என்றார் அவர்.

