


புத்ரா ஜெயா, ஆக 3-
ஆகஸ்ட் மெர்டேக்கா மாதத்தை முன்னிட்டு மெர்டேக்கா கொண்டாட்டத்தை வரவேற்கும் வகையில் மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் நேற்று தமது அமைச்சில் மெர்டேக்கா கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மனிதவள அமைச்சு ஏற்பாடு செய்த மெர்டேக்கா சைக்கிளோட்டத்தில் மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மனிதவள அமைச்சர் சிவகுமார் மலேசிய கொடியை அசைத்து வைத்து மெர்டேக்கா தின கொண்டாட்டத்தை உற்சாகமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

