Batu Gajah Jelapang Tambahan தேவிஸ்ரீ மூகாம்பிகை கோயில் திருப்பணிக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் ஒரு லட்சம் வெள்ளி மானியம்!

ஜெலாப்பாங், ஆக 3-
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஜெலாப்பாங் தம்பாஹான் தேவிஸ்ரீ மூகாம்பிகை கோயில் திருப்பணிக்கு ஒரு லட்சம் வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

கோவில் நிர்வாகத்தின் தலைவர் தினகரன் அழைப்பை ஏற்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் இன்று கோவிலுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.

சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

இதே இடத்தில் புதிய கோவிலை கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் 3 லட்சம் வெள்ளியை திரட்டி வருவதாக கோவில் தலைவர் தினகரன் தெரிவித்தார்.

கோவில் நிர்வாகத்தின் விளக்கங்கள் கேட்டறிந்த பின்னர் மறுகணமே தமது சார்பில் ஒரு லட்சம் வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.

தமது தொகுதியில் உள்ள இந்த கோவில் கட்டும் மணிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தபோது கோவில் நிர்வாகத்தினர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவகுமார் தொகுதி மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருகிறார் என்று கோவில் தலைவர் தினகரன் தெரிவித்தார்.

அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லும் அவரின் பண்பு
அளப்பரியது.

மனிதவள அமைச்சின் கடுமையான வேலைகளுக்கு மத்தியில் சிவகுமார் சிறந்த முறையில் தொகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles