
தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள். இவர்கள் என்றும் சோடை போனது கிடையாது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் புகழாரம் சூட்டினார்.
தமிழ்ப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது அவர்கள் இதர மாணவர்களை காட்டிலும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.
இவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனையும் படைக்கின்றனர் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
கோலசிலாங்கூர் இரண்டரை மைல்
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மனித வள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்து உரையாற்றினார்.
அனைத்துலக புத்தாக்க போட்டிகளிலும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பல வெற்றிகளை குவித்து வருவதும் பாராட்டுக்குரியது என்றார்.
தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக எப்போதும் தமது குரல் ஒளித்து கொண்டே இருக்கும் என்று அவர் சொன்னார்.
கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தலைவர் கண்ணதாசன் செயலாளர் நாராயணசாமி ஆலோசகர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

