
புத்ரா ஜெயா அக் 3-
தேசிய தொழில்திறன் பயிற்சி கல்லூரிகளின் அமைப்புக்களின் ஏற்பாட்டில் தேசிய தொழில்திறன் மாநாடு விரைவில் நடைப்பெறும் என்று மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர் தொழில் திறன் பயிற்சி சம்மேளனத்தின் தலைவர்
டத்தோ மூர்த்தி தலைமையிலான செயல்குழு உறுப்பினர்கள் நேற்று மனித வள அமைச்சர் சிவகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த
சந்திப்பில் தேசிய தொழில் திறன் மாநாட்டிற்கான விபரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் தனியார் தொழில்திறன் கல்லூரிகள் எதிநோக்கும் சிக்கல்கள் மிக விரைவில் களையப்படும் என அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார் .
தொழில்கல்வி கடனுதவிகள் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்கல்விக்கான பயிற்றுனர் பற்றாக்குறையும் அமைச்சரின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

