
மலேசியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நம்பிக்கை குழுமம் எதிர்வரும் அக்டோபர் 26 & 27 ஆகிய இரண்டு நாள்களில் பிரமாண்டமான முறையில் “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கை வர்த்தக விருதுகள்” விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.
மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் இந்த “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கை வர்த்தக விருதுகள்” விழா டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மண்டபம், ஜாலான் டிராவர்ஸ், மலேசியா எனும் முகவரியில் மேலே குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இதற்கான அறிவிப்பாக இன்று தலைகரில் அமைந்துள்ள பெசிபிக் ரெஜென்சி ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு வெற்றிகரமாக நம்பிக்கை விருது விழாவை செய்து முடித்ததை தொடர்ந்து இவ்வாண்டும் நம்பிக்கை குழுமத்தின் “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கை வர்த்தக விருதுகள்” விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருப்பதாக நம்பிக்கை குழுமத்தின் தோற்றுநரும் தலைவருமான டத்தோ ஶ்ரீ முஹம்மது இக்பால் தெரிவித்தார்.
நமது மலேசிய நாட்டில் வர்த்தகத்தில் நம் இந்தியர்கள் தங்களது வெற்றிகளை பதிவு செய்து வருகின்றனர். உழைப்பின் மூலம் இந்தியர்களின் அடையாளங்களை நிலைபெற செய்த தொழில் முனைவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதன் முறையாக “நம்பிக்கை வர்த்தக விருது” யும் ஏற்பாடு செய்து கௌவரவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

