நல்ல எண்ணத்துடன் கட்சிகள் தொடங்கப்பட வேண்டும்! – டத்தோஸ்ரீ தனேந்திரன்

மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்துடன் கட்சிகள் அமைக்கப்பட வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கூறினார்.

மலேசியா மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு நேற்று அக்டோபர் 10ஆம் தேதியுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

கட்சியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தொடக்கி வைத்ததுடன் இன்று வரை அவர் இந்த கட்சிக்கு முழு ஆதரவை வழங்கிய வருகிறார்.

அதேபோன்று நாங்களும் அவருக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்து வருகிறோம்.

மலேசியா மக்கள் சக்தி கட்சி தொடங்கும் போது இது மலையில் பூத்த காலான். விரைவில் காணாமல் போய்விடும் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் தற்போது இக்கட்சிக்கு 15 வயதாகிவிட்டது. இன்னமும் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கட்சியின் இந்த வெற்றிக்கு நல்ல சிந்தனையும் எதிர்கால இலக்குகளும் தான் முக்கிய காரணம் என அவர் சொன்னார்.

தற்போது நாட்டில் புதிய கட்சிகள் தொடங்கப்படும் என பேசப்பட்டு வருகிறது. நல்ல சிந்தனைகள் அந்த கட்சிகள் தொடங்கப்பட வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அந்தக் கட்சிகள் தொடங்குவதில் எந்த பயனும் இல்லை.

குறிப்பாக பழிவாங்கும் எண்ணங்களுடன் அக்கட்சிகள் தொடங்கப்பட்டால் அது நிலைக்காது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சிரம்பான் ராசா தொகுதியின் அறிமுக விழாவிற்கு பின் டத்தோஸ்ரீ தனேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி மஇகாவுடன் இணைந்து விட்டது. இதனால் அந்த கட்சி காணாமல் போய்விடும் என்ற பேச்சுகள் பரவலாக உள்ளது.

இந்திய சமுதாயம் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும் என்று அடிப்படையில் தான் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

அதற்காக மலேசிய மக்கள் சக்தி கட்சி காணாமல் போய்விடும் என யாரும் ஏளனமாக பேச வேண்டாம் என்றார் டத்தோஸ்ரீ தனேந்திரன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles