
இன்றைய சுழ்நிலையில் நாட்டில் ஏழ்மை நிலையிலுள்ள பி40 பிரிவு மக்களுக்க்கு காப்புறுதி திட்டம் வாங்குவது என்பது எட்டா கனியாக இருக்கிறது. அத்தகைய மக்களுக்கு காப்புறுதி திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என் நோக்கத்துடன் gmat நிறுவனம் வருடத்திற்கு 50 வெள்ளி கட்டணத்தில் ரஹ்மா காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தாங்களே இணையம் வழி காப்புறுதியை 2 நிமிடங்களிலே பெற்றுகொள்ளும் வகையில் இந்த ரஹ்மா காப்புறுதியை வழங்கப்பட இருப்பதாகவும் ஜீமாட் நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி மாரிமுத்து தெரிவித்தார்.
பி40 மக்களுக்கான தரமான காப்புறுதியை குறைந்த தொகையில் வழங்கிட தோக்கியோ மெரின் மற்றும் ஸுரிக் தக்காபுல் காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டிருப்பதாகவும் மாரிமுத்து கூறினார்.
விபத்தில் உயிரிழந்தாலும் டிங்கி காய்ச்சலில் உயிரிழந்தாலும் காப்புறுதி பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும். மேலும் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு 100 ரிங்கிட் வழங்கப்படும். இந்த காப்புறுதி திட்டத்திற்கு 18 முதல் 70 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி40 மக்களுக்காக அறிமுகம் செய்த இந்த ரஹ்மா காப்புறுதி திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜீமாட் நிறுவனம் டிரா மலேசியா சங்கத்துடன் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் முன்னிலையில் கையெழுத்திடப் பட்டது.
பி40 மக்களுக்காக அறிமுகம் செய்திருக்கும் இந்த காப்புறுதி திட்டத்தின் முக்கியத்துவத்தினை மக்கள் பெற்று பயன்பெற வேண்டும். காப்புறுதியின் அவசியமும் தேவையையும் விழிப்புடன் இருப்பது சிறப்பு என டிரா மலேசியாவின் தலைவர் சரவணன் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார பிரச்சினை காரணமாக பி40 பிரிவை சேர்ந்த மக்கள் காப்புறுதி இல்லாமலும் காப்புறுதி வாங்குவதற்கு முடியாமலும் உள்ளனர். அவர்களுக்கு காப்புறுதி பெறுவதற்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஜீமாட் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் அவர் சொன்னார்.
இந்த பி40 ரஹ்மா காப்புறுதி அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், இந்த அறிய திட்டத்தினை வரவேற்கத் தக்கது என பாராட்டினார். மேலும் பத்து தொகுதியிலுள்ள பிபிஆர் குடியிருப்பு மக்களுக்கு இந்த காப்புறுதி திட்டத்தை கொண்டு சேர்க்கப் போவதாகவும் இத்திட்டத்தின் விழிப்புணர்வை வழங்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்த ரஹ்மா காப்புறுதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் gmat.com.my இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம். இந்த இணைய தளத்தில் மக்கள் தங்களின் வாகனத்தின் காப்புறுதி மற்றும் சாலை வரியையும் புதுபித்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாகவும் என ஜீமாட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி தேவேந்திரன் தெரிவித்தார்.

