

புத்ரா ஜெயா அக் 17-
சிறந்த முறையில் சமுதாயப் பணிகளை ஆற்றி வரும் மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்திற்கு 30,000. வெள்ளி மானியம் வழங்க மனிதவள அமைச்சர் வ சிவகுமார் முன் வந்துள்ளார்.
மலேசிய தமிழன் உதவும் கரங்கள் அடுத்த ஆண்டு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் காலடி எடுத்து வைக்கிறது.
இந்நிலையில்
வரும் 14-1-2024 ஆம் தேதி பத்துமலை முருகப்பெருமான் திருத்தலத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலி உதவியோடு 272 படிகளை கடந்து முருகப் பெருமானை தரிசிக்க மலேசிய தமிழன் உதவும் கரங்கள் மிகப்பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது என்று அதன் தலைவர் டாக்டர் முரளி ஆறுமுகம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கும்படி மனிதவள அமைச்சர் சிவகுமார் அவர்களை முரளி கேட்டுக் கொண்டார்.
மேலும் மலேசிய தமிழர் உதவும் கரங்கள் இயக்கத்தின் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி ஆதரவு தரும்படியும் அமைச்சரை கேட்டுக் கொண்டார்.
மலேசிய தமிழன் உதவும் கரங்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர் சிவகுமார் 30,000 வெள்ளியை வழங்குவதாக அறிவித்தார்.
மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் எஸ். மோகன், டனேஷ் குமார், ரமேஷ், சுரேஸ் வீரப்பன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

