சுங்கை பூலோ கோல்ட் பீல்ட் தோட்ட ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் திருப்பணி பூர்த்தி அடைய உதவிகரம் நீட்டுங்கள்!

புத்ரா ஜெயா அக் 25-
சுங்கை பூலோ கோல்ட் பீல்ட் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் இப்போது 18 லட்சம் வெள்ளியில் திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.

கே.எல். கேப்போங் மேம்பாட்டு நிறுவனம் கோவில் கட்டுவதற்கு முக்கால் ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

தற்போது 13 லட்சம் வெள்ளியில் 60 விழுக்காடு திருப்பணி வேலைகள் பூர்த்தி அடைந்து விட்டதாக ஆலயத் தலைவர் மணிவண்ணன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்னும் 40 விழுக்காடு திருப்பணி வேலைகள் முடிவடைய 5 லட்சம் வெள்ளி தேவைபடுகிறது.

கோவில் திருப்பணி வேலைகள் முடிவடைய மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் உதவி புரியும்படி கோவில் தலைவர் மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.

மரியாதை நிமித்தமாக சுங்கை பூலோ கோல்ட் பீல்ட் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.

கோல்ட் பீல்ட் தோட்ட
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று உதவி செய்வேன் என்றும் வரும் டிசம்பர் மாதம் கோவிலுக்கு வருகை புரிவதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles