செலாயாங் பாசார் பூரோங்கில்வேலை செய்யும் மலேசியர்களுக்கு இ.பி.எப். சொக்சோ இல்லை! அமைச்சர் சிவகுமாரிடம் முறையீடு

புத்ராஜெயா, அக். 25-
செலாயாங் பாசார் பூரோங்கில் வேலை செய்யும் மலேசியத் தொழிலாளர்களுக்கு இ.பி.எப் மற்றும் சொக்சோ இல்லை என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரிடம் இன்று புகார் முன் வைக்கப்பட்டது.

Persatuan Kebajikan Pekerja Pekerja Pasar Borong Kuala Lumpur தலைவர் தீபம் ஜோர்ச் சந்தனசாமி தலைமையிலான உறுப்பினர்கள் இன்று புத்ரா ஜெயாவில் மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் செலாயாங் பாசார் பூரோங்கில் வேலை செய்யும் மலேசியத் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் இல்லை, கூடுதல் நேரம் வேலை, குத்தகை அடிப்படையில் நாள் சம்பளம், இ.பி.எப் மற்றும் சொக்சோ பாதுகாப்பு இல்லை என்று அவர் முறையிட்டார்.

வேலை செய்யும் இடத்திலும் வேலைக்கும் வீட்டிற்கும் திரும்பும் நேரத்தில் எதாவது விபத்து நிகழ்ந்தால் தொழிலாளர்களுக்கு எவ்வித சமூகநல பாதுகாப்பும் இல்லை என்றார்.

மலேசியத் தொழிலாளர்கள் நலன் கருதி மனிதவள அமைச்சு இபிஎப் மற்றும் சொக்சோ சமூகநல பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles