
பட்ஜெட்டில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளி மானியம் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டது என்று எவ்வாறு நிரூபிப்பது என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஏழை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும் பத்து கோடி வெள்ளி மித்ரா நிதி முறையாக இந்திய சமுதாயத்திற்கு போய் சேரவில்லை.
இந்த நிதி யாருக்கு போய் சேர்ந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்த மித்ரா நிதி குறிப்பாக ஏழைகளுக்கு சேரவில்லை.
குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே இந்த நிதி போய் சேர்ந்தது.
அதேபோல் இந்திய சமுதாயத்தின் கல்விக்கு 25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி எம்ய்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது தவிர ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு அல்ல என்று அவர் சொன்னார்.
இந்திய சமுதாயத்திற்கு அதை செய்தேன், இதை செய்தேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறிவருகிறார்.
உண்மையில் இந்த நிதிகள் ஒருபோதும் இந்திய சமுதாயத்திற்கு அல்ல. ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு மட்டுமே என்று அவர் சுட்டிக் காட்டினார்.

