
நாட்டில் இளம் பெருநடை விளையாட்டாளர்களை உருவாக்குவதில் கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கம் தீவிரமாக களம் இறங்கி இருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ வி.புலேந்திரன் தெரிவித்தார்.
கடந்த வாரம் இறுதியில் புக்கிட் ஜாலில் அரங்கில் இளம் பெருநடையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட இளம் பெருநடையாளர்கள் கலந்து கொண்டனர்.
வருங்காலத்தில் இளம் பெருநடையாளர்கள் அதிகம் தேவைப்படுவதால் கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கம் இந்த மூயற்சியில் களம் இறங்கி இருப்பதாக அவர் சொன்னார்.

