தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்த 1,400 குடும்பங்களுக்கு உதவி

வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,400 வசதி குறைந்த குடும்பத்தினர் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு தலா 100 ரிங்கிட் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல மன்றத் (பெக்காவானிஸ்) தலைவர் டத்தின்ஸ்ரீ
மஸ்டியானா முகமது கூறினார்.

இதன் மூலம் அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் பெருநாளை
மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவும் இயலும் என அவர் சொன்னார்.

சமூகத்தின் குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் நலன் காப்பது சிலாங்கூர் மகளிர் நல மன்றத்தின் தலையாய நோக்கமாக உள்ளது.

இந்த அமைப்பு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ரொக்க மற்றும் அத்தியாவசிய பொருளுதவிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles